Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு டீ போட்டு கொடுத்த திமுககாரர்


sivalingam| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (23:33 IST)
உடல்நலமின்றி இருக்கும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக ஐந்து நாட்கள் பரோல் விடுதலை பெற்ற சசிகலா, இன்று மாலை 3 மணிக்கு பெங்களூரில் இருந்து கார் மூலம் சென்னை வந்தார்.


 
 
வரும் வழியில் ஓசூரில் டிபன் சாப்பிட்ட சசிகலா அதன் பின்னர் ராணிப்பேட்டை வந்ததும் டீ சாப்பிட வேண்டும் என்றார். அப்போது ஒரு டீக்கடை அருகில் கார் நிறுத்தப்பட்டது. அந்த டீக்கடை முழுவதும் கருணாநிதி, ஸ்டாலின் என தலைவர்களின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.
 
டீக்கடைக்காரர் திமுககாரர் என்று தெரிந்தும் எந்தவித மறுப்பும் இன்றி அந்த கடையில் சசிகலா டீ சாப்பிட்டார். அதன் பின்னர் சசிகலாவின் கார் காஞ்சிபுரம் அருகே வந்தபோது மொளச்சூர் பெருமாள் தலைமையில் அவருக்கு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் என திருஷ்டி சுற்றினார்கள் அ.தி.மு.க.வினர். அவற்றை புன்னகையோடு ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் சசிகலா.


இதில் மேலும் படிக்கவும் :