சசிகலா தங்குப் போகும் வீடு இதுதான்....


Murugan| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (15:27 IST)
சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சசிகலா சென்னையில் தங்கப் போகும் வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

 
தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள்  மட்டும் பரோல் கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் இன்று அனுமதியளித்தது.
 
அதைத் தொடர்ந்து, அவரை காரின் மூலம் டிடிவி தினகர்ன சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில், சென்னையில் அவர் எங்கு தங்கப் போகிறார் என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. அதில், சிறுதாவூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரின் வீடு என மூன்று இடங்கள் அடிபட்டன.
 
தற்போது, அவரது உறவினரான இளவரசிக்கு சொந்தமான தி.நகர் வீட்டிலேயே தங்க இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விட்டிலேயே அவர் வருகிற 11ம் தேதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

அவர் அங்கு தங்கபோவது தெரிந்ததும், அந்த வீட்டின் முன்பு சசிகலாவின் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். எனவே, அங்கு உயர் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :