Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓகி வெறும் டிரெய்லர்தான் ; 3ம் தேதி அடுத்த புயல் - தப்பிக்குமா தமிழகம்?

Last Modified வியாழன், 30 நவம்பர் 2017 (17:21 IST)
கன்னியாகுமரி கடற்பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயலைத் தொடர்ந்து, அடுத்து ஒரு புயலை தமிழகம் சந்திக்கவுள்ளது. 


 
குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. 
 
மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பயங்கர காற்று வீச்யதில் மரங்கள் வேறோடு விழுந்தன. இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஓகி புயல் நாளை மாலை தமிழகத்தை கடக்க இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் அடுத்த இரண்டு நாளில் இன்னொரு சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தமான் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. தற்போது அதில் எந்த மாற்றமும் இல்லை. இதே நிலை நீடித்து, வருகிற 3ம் தேதிக்கு பின் அது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது புயலாக உருவெடுக்கும். அப்படி புயல் சின்னம் உருவானால் கண்டிப்பாக தமிழகத்தின் கடல் பகுதியில்தான் அந்தப்புயல் கரையைக் கடக்கும்.
 
அப்போது, தமிழக கடற்கரை மாவட்டங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெய்தது போல் கனமழை பெய்யும் எனத் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :