வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (11:33 IST)

பயோமெட்ரிக் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருள்

தெளிவின்மையால் விரல் ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும் என அறிவிப்பு. 
 
உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 
 
1. தெளிவின்மையால் விரல் ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும்
 
2. தொழில்நுட்பக்கோளாறால் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருளை தர வேண்டும்
 
3. ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
 
4. முதியோர், மாற்றுத்திறனாளிக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால் உடனடியாக பொருட்களை அளிக்க வேண்டும்
 
5. கடைக்கு வருவோரிடம் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து கனிவுடன் விரல் ரேகையை சரிபார்க்க வேண்டும்.