திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (11:09 IST)

கோவில்களை திறக்கப் போராட்டம்! – பாஜக அண்ணாமலை மீது வழக்கு!

தமிழகத்தில் கோவில்களை திறக்கக் கோரி போராட்டம் நடத்திய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கோவில்கள் வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவில்களை வாரம் முழுவதும் திறக்கக் கோரி நேற்று பாஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை உள்ளிட்ட 300 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.