திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:25 IST)

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொலு பொம்மை விற்பனை! – புதுச்சேரி வியாபாரிகள் மகிழ்ச்சி!

புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நாளில் துர்கா பூஜை, விரதமிருத்தல் மற்றும் கொலு பொம்மையும் வைக்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் இந்த சமயங்களில் கொலு பொம்மை விற்பனை பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நவராத்திரி விழா பொதுவில் கொண்டாட அனுமதி இல்லாததால் கொலு பொம்மை விற்பனையும் பாதித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொலு பொம்மை விற்பனைக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் கொரோனா காரணமாக விற்பனை முந்தைய ஆண்டுகளை விட மந்தமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.