செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (15:44 IST)

இ-பாஸ் வில்லங்கம்: காவல் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பாரா ரஜினி?

ரஜினி இ-பாஸ் எடுத்தாரா இல்லையா என சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் காவல் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பாரா என அடுத்த பரபரப்பு எழுந்துள்ளது. 
 
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு தனது மகள் செளந்தர்யா, மருமகன் விசாகன், பேரன் ஆகியோர்களுடன் லம்போர்கினி காரில் சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிச் சென்றாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா? என்பதை ஆய்வு செய்து தான் கூற முடியும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தில் இ-பாஸ் வாங்கினாரா என்பதையும், பிறகு அங்கிருந்து சென்னை வருவதற்கு இ-பாஸ் வாங்கினாரா என்பதையும் மாநகராட்சி ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் ரஜினி பாஸ் எடுக்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியிருந்தார். ஆனால், தற்போதைய அறிவிப்பின் படி சென்னையில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ-பாஸ் எடுத்தார் எனவும் மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மருத்துவ காரணம் என ரஜினி குறிப்பிட்டுள்ளது உண்மைதானா அல்லது பொய்யாக காரணம் கூறப்பட்டுள்ளதா என தெரியவில்லை.