வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (14:42 IST)

ரஜினிகாந்த் மாதிரி எல்லாரும் முன்வரணும்! – பாஜக தலைவர் எல்.முருகன் பாராட்டு!

கந்த சஷ்டிகவச விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளதற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டிகவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக சில நாட்கள் முன்னர் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அந்த சேனலில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பாஜக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல நடிகர்களும் குரல் கொடுத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மதரீதியான தாக்கி பேசும் அமைப்புகள் மீது தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த ஆதரவு பதிவு குறித்து கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசிய கயவர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். இதேபோல் அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.