ஒரே நாளில் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த ரஜினிகாந்த்-திருநாவுக்கரசர்

Last Modified வெள்ளி, 11 ஜனவரி 2019 (09:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காக சமீபத்தில் தனது குடும்பத்தினர்களுடன் அமெரிக்கா சென்றார். அதேபோல் அமெரிக்காவில் உள்ள உறவினர்களை சந்திக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

இந்த நிலையில் நேற்றிரவு அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பிய நிலையில் திருநாவுக்கரரும் அமெரிக்காவில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், 'எனது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் இருப்பதால் 20 நாட்கள் அமெரிக்கா சென்று வந்தேன். வேறு எதுவும் காரணம் இல்லை. இனிமேல், கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடப்போகிறேன்' என்று கூறினார்


அமெரிக்காவில் இருந்தபோது ரஜினியை அவர் சந்தித்து பேசினாரா? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. ஏற்கனவே சிகிச்சைக்காக சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் அமெரிக்காவில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :