ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:41 IST)

என்னை உசுப்பேற்றினார்கள்: அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று அதிகாலையிலேயே ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

அனைத்து ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருவதால் ரஜினிக்கு இன்னொரு வெற்றிப்படம் இது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதவது: பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்; அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்' என்று கூறியுள்ளார்.