தீவிர சினிமாவை விட்டு, தீவிர அரசியலில் எப்பொழுது? ரஜினிகாந்த் பதில்

politics
Last Modified வெள்ளி, 11 ஜனவரி 2019 (08:57 IST)
அரசியலுக்கு எப்பொழுது வரப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று அதிகாலையிலேயே ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து படத்தை பார்த்து ரசித்தனர்.
 
படம் குறித்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினிகாந்த் பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்; அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்' என்று கூறினார்.
 
தொடர்ந்து தீவிரமாக படத்தில் நடித்து வரும் நீங்கள் எப்பொழுது தீவிரமான அரசியலுக்கு வரப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்று மழுப்பலாக அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :