Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஷால் மனு நிராகரிப்பு விவகாரத்தில் நடந்தது என்ன? லக்கானி விளக்கம்

Last Modified வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:07 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. விஷாலை முன்மொழிந்த இரண்டு நபர்கள், தாங்கள் முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்று கூறியதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தார்
இதுகுறித்து விஷால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் விஷால் மனு நிராகரிப்பு விவகாரத்தில் தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தனித்தனியாக தீபன், சுமதி ஆகிய இருவரிடமும் விசாரணை செய்யப்பட்டதாகவும், அதில் யாரும் மிரட்டவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும், அது வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கவர்னர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கவிருப்பதாக கூறிய விஷால் தற்போது அமைதியாக இருப்பதால் இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :