Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பதை கூட தெரியாமல் இருக்கும் விஷால்

Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (17:33 IST)
சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட மனுதாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று மாலை விஷால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

ஆனால் அந்த புகாரில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி என்று விஷால் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு உள்ளாட்சி தேர்தலை மட்டுமே நடத்தும் அதிகாரம் உண்டு. இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்தும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அவர் தன்னுடைய மனுவில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்

விஷால் அரசியலுக்கு கத்துக்குட்டி என்பதும், விஷாலுக்கு வழிகாட்ட விவரமானவர்கள் இல்லை என்பதையே இதுகாட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள வித்தியாசம் கூட நடிகர் விஷால் மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட போகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன


இதில் மேலும் படிக்கவும் :