வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஜனவரி 2018 (10:10 IST)

20 லிட்டர் பால்; காபி போட என நினைத்தேன்.. அம்மாவிற்கு என தெரியாது: ராஜேந்திர பாலாஜி புலம்பல்...

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலா 20 லிட்டர் பாலிற்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கூறினார் என கூறி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதா இறந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியும், அதற்கு முதல்நாளும் சென்னை அப்பல்லோவில் நடந்த சம்பவங்களை விவரித்தார். 
 
இது குறித்து ராஜேந்திர பாலாஜி கூறியது பின்வருமாறு, ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக டிசம்பர் 4 ஆம் தேதி எனக்கு போன் வந்தது. எம்எல்ஏ-க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வரும்படி 4 ஆம் தேதி நள்ளிரவே அதிமுக தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. 
 
மருத்துவ ரீதியாக ஜெயலலிதா இறந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பால்வளத்துறை அமைச்சராக இருப்பதால் டிசம்பர் 5 ஆம் தேதியன்று சசிகலா என்னிடம் 20 லிட்டர் பால் ஏற்பாடு செய்யுமாறு கூறினார். 
 
நான் காபி போடத்தான் கேட்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், பால் ஏற்பாடு செய்வதற்காக நான் சென்ற போதே ஜெயலலிதா இறந்து விட்டதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது என கூறியுள்ளார்.