திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:43 IST)

சூடு பிடிக்கின்றது பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விரைவில் தீர்ப்பு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அதன் பின் அந்த வழக்கு குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைவில் முடிக்க தயார் என காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
 
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருளானந்தம் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணை தாமதம் ஆவது ஏன் என நீதிமன்றம் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆட்கள் பற்றாக்குறையால் விசாரணை தாமதமாக நடந்து வருவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில்  பொள்ளாச்சி பாலியல் வழக்கை டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் முடிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் விரைவில் இந்த வழக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது