Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தில் லாவண்யா கொசுக்கள்: பெரம்பலூர் எம்.எல்.ஏவின் கண்டுபிடிப்பு

tamilselvan mla" width="600" />
sivalingam| Last Updated: சனி, 11 நவம்பர் 2017 (13:49 IST)
கடந்த சில மாதங்களாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து வருவதை மக்கள் பார்த்து கொண்டு தான் வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மோகோ கண்டுபிடிப்பு இவற்றில் மிக மிக பிரபலம்


 
 
இந்த நிலையில் தங்கசெல்வன் தற்போது புதியதாக லாவண்யா என்ற கொசு வகையை கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே பேசிய அவர் லாவா என்பதற்கு பதில் லாவண்யா என்று கூறியதை சமூக வலைத்தள பயனாளிகள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
 
வீட்டின் முன் இருக்கும் பழைய அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் தேங்கியுள்ள மழை நீரில் லாவண்யா கொசுக்கள் உற்பத்தியாகும் என்று தங்கசெல்வன் எம்.எல்.ஏ பேசினார். பின்னர் மேடையில் இருந்தவர்கள் அதை சுட்டிக்காட்டியவுடன் சிரித்து கொண்டே லாவா கொசு என்று திருத்தினார். இந்த ஆட்சியில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்க போகின்றதோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :