1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (11:12 IST)

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வெளிநடப்பு - தமிழக சட்டப்பேரவையில் முதல்முறை

இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருக்கும் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் இன்று சட்டபேரைவில் கலந்து கொண்டார். அப்போது சுகாதாரத்துறை தொடர்பாக அவர் சில கேள்விகளை எழுப்ப முயன்றார். ஆனால், இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை.
 
இதனால் அவர் சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். பொதுவாக, ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள்தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், முதல்முறையாக ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவே வெளிநடப்பு செய்திருப்பது இதுதான் முதல்முறை ஆகும்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சட்டப்பேரவை செயல்படுவதால், தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வனுக்கு உரிமை மறுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.