1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (17:36 IST)

நள்ளிரவில் கர்ப்பிணியுடன் வந்த ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம்! விதித்த போலீஸார்

police
நள்ளிரவில் ஆட்டோவில் கர்ப்பிணிப் பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ  ஓட்டுனரை மாக்கி ரூ.1500 அபராதம் வசூலித்த உதவி ஆய்வாளர் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.

சமீபத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்தர் பாபு ,காவல்துறையினர்  பொதுமக்களிடம் கண்ணியமாகவும் மரியாதையாக நடக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.


இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தன் ஆட்டோவில் ஆ அழைத்து வந்த ஆட்டோ டிரைவரை மடக்கி, கீழே இறக்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஒருவர், அவர், எமர்ஜென்சி என்று கூறியும் பொருட்படுத்தாமல், அவரிடம் ரூ.1500அபராதம் வசூலித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.