1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:50 IST)

₹177 அபராதம் விதித்த எஸ்பிஐ வங்கிக்கு ₹85,177 அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்

state bank
வாடிக்கையாளருக்கு ₹177 அபராதம் விதித்த எஸ்பிஐ வங்கிக்கு நுகர்வோர் உரிமை ஆணையம் என்பது ₹85,177 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹலியால் என்ற பகுதியில் கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக காசோலையை எஸ்பிஐ வங்கி நிராகரித்தது. அதனை அடுத்து அந்த வாடிக்கையாளருக்கு ரூபாய் 177 அபராதம் விதித்து எஸ்பிஐ வங்கி உத்தரவிட்டது. 
 
இதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் உரிமை ஆணையத்தை அணுகினார். இது குறித்த விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் விசாரணையின் முடிவில் கன்னட மொழியில் எழுதப்பட்ட காசோலையை நிராகரித்ததற்காக எஸ்பிஐ வங்கிக்கு ₹85,177 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது 
 
எஸ்பிஐ வங்கி விதித்த அபராதத் தொகை விட 85 ஆயிரம் ரூபாய் அதிகமாக நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்தது ஏற்படுத்தி உள்ளது.