930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு ; இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை!
930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 நபர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பாசி நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தின் மூலம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக முதலீட்டாளர்களிடம் மோசடி செய்தது. இதனை அடுத்து சிபிஐ இந்த நிறுவனத்தின் இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் அவரது தந்தை கதிரவன் ஆகியோர்களை கைது செய்தது
9 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 171 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை 1402 பேருக்கு பகிர்ந்து அளிக்க உத்தரவிடப்பட்டது மேலும் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது