திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (12:33 IST)

கோவை செல்வராஜ் விலகலால் எந்த பாதிப்பும் இல்லை.. ஓபிஎஸ் தரப்பு

kovai selvaraj5
அதிமுகவில் இருந்து திடீரென கோவை செல்வராஜ் விலகி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கோவை செல்வராஜ் விலகலால் ஓபிஎஸ் அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
துகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ மேலும் கூறியதாவது அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில் சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்து இருப்பதாகவும் அவருடைய விலகல் ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
கோவை செல்வராஜ்-க்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை செய்து இருந்தார் என்றும் ஆனால் அதற்குள் அவர் திமுகவில் இணைந்து விட்டார் என்றும் ஐயப்பன் விளக்கமளித்துள்ளார்.
 
Edited by Mahendran