1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:02 IST)

தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

dinakaran
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
திமுக அசுர பலத்தில் இருப்பதாகவும் அந்த கட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் இணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தங்களது கட்சி இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தலில் கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran