செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (23:33 IST)

கரூரில் 5 மணி நேரமாக அதிமுகவினர் போராட்டம்

karur
கரூரில் 5 மணி நேரமாக நீடித்த போராட்டம் மாநகராட்சி அதிகாரி மற்றும் காவல்துறை ஆய்வாளர் திக்காட வைத்த கரூர் மாவட்ட அதிமுக வினர்.
 
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்ற சதி ? குகைவழிப்பாதையில் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததால் எடுப்பதாகவும், ஏற்கனவே ஒரு நுழைவு வாயில் போர்டினை அகற்றியதற்கும் கண்டனம் தெரிவித்து அதிமுக வினர் ராட்சத இயந்திரத்தினை முற்றுகையிட்டு சுமார் 5 மணி நேரம் போராட்ட்த்தில் ஈடுபட்ட்தால் பரபரப்பு 30 நாட்களில் இரண்டு நுழைவு வாயில்களும் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்த்தன் பேரில் அதிமுக வினர் கலைந்து சென்றதால் கரூரில் பரபரப்பு.
 
 
கரூர் நகராட்சியாக இருந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சியானது. பின்னர் மாநகராட்சி தேர்தல் முடிந்த நிலையில் திமுக கோட்டையாக மாறியது ஒருபுறம் இருக்க, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றியும், இருட்டடிப்பு செய்தது. தமிழகத்தினை ஆளும் திமுக அரசும், திமுக மாநகராட்சியும் இணைந்து பல்வேறு திட்டங்களுக்கு மூடு விழா நடத்திய நிலையில், அம்மா சாலை என்கின்ற திட்டம் என்பதினால் அந்த திட்டத்தினை திமுக அரசு, அப்படியே கால் பகுதி வேலையை பாதியில் விட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக இருந்த கரூர் டூ பெரியகுளத்துப்பாளையம் பகுதி மக்களின் கோரிக்கையான குகைவழிப்பாதையை கடந்த 2019 ம் ஆண்டு 6.09 கோடி மதிப்பீட்டில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரால் பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை கொண்டு வரப்பட்டது.

அதன் கல்வெட்டு மற்றும் நுழைவு வாயில்களை முற்றிலும் அகற்றும் பணி தற்போதைய திமுக அரசு நடத்தி வருகின்றது. ஏற்கனவே கல்வெட்டினை காகிதங்கள் கொண்டு மறைத்த நிலையில் அதிமுக வினர் அதனை கிழித்து மீண்டும் மக்களின் கண்ணில் படும் படி செய்துள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை நுழைவு வாயிலின் முன்புறம் இருந்த போர்டில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரது படங்கள் அடங்கிய போர்டு என்பதினால் அதனை அகற்ற திமுக மாநகராட்சி முயற்சித்தும், கேஸ் வெல்டு கொண்டு நட்டுகளை எல்லாம் அகற்றி, அரக்கி அந்த நுழைவு வாயில் போர்டுகளை ராட்சித இயந்திரங்களை அகற்றியது. இந்நிலையில், இதனையறிந்த அதிமுக வினர் ஒன்று திரண்டு ராட்சித கிரேனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு மாநகராட்சியின் செயற்பொறியாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் சுமார் 3 மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர், 30 தினங்களுக்குள் போர்டினை மாநகராட்சி என்று பெயர் மாற்றி தற்போது இருக்கும் புகைப்படங்களுடன் புதுப்பொழிவுடன் வைக்கப்படும் என்றும், கல்வெட்டுகளும் சீரமைக்கப்படும் என்றும் கூறி உறுதி அளித்ததன் பேரில் அதிமுக வினர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் கரூர் மாநகராட்சியில் பரபரப்பு நிலவியது.
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக தலைமையில் மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாநகராட்சி பகுதி செயலாளர்கள் மேற்கு நகர செயலாளர் அண்ணாநகர் சக்திவேல், மேற்கு நகர துணை செயலாளர் குளத்துப்பாளையம் பிரபு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பகுதி செயலாளர்களான சுரேஷ், ஆண்டாள் தினேஷ், வடக்கு மாநகரம் அன்னமார் தங்கவேல், வழக்கறிஞர்கள் கரிகாலன், ஷேக் பரீத், மூவை ஜெகதீஸ், விவிஜி நகர் சிவா உள்ளிட்ட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகழ் வாழ்க என்றும் கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழ் வாழ்க என்றும் கூறி ஒருவழியாக போராட்டத்தினை முடித்தனர்.
 
மக்களுக்காக ஒரு குகைவழிப்பாதையை அன்றைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொண்டு வந்தார். அதில் அவருடைய பெயரும் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது புகைப்படமும் இருப்பது இன்றைய திமுக அரசிற்கும், திமுக மாநகராட்சிக்கும் பிடிக்காமல் இப்படி செய்கின்றதே, இந்த குகைவழிப்பாதையில் தினமும் தேங்கும் கழிவுநீர் மற்றும் ஊற்று நீரை எடுக்க ஏதேனும் மாற்று முயற்சி எடுக்க வேண்டியது தானே என்று பொதுமக்களும் நடுநிலையாளர்கள் புலம்பிய படியே இப்பகுதியில் பயணித்து வருகின்றனர்.