வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (13:32 IST)

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்..!

ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க இன்றே கடைசி நாள் என்றும் நாளை முதல் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்த நிலையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அமைச்சர் சேக பாபு சற்றுமுன் அளித்த பேட்டியில் நாளை முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாகத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்  நாளை முதல் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவது தடை செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
அவருடைய இந்த பேச்சுக்கு பதில் அளித்துள்ள ஆம்னி அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.  இந்த பேட்டியில் 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை  இயக்க முடியாது என்றும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran