வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (08:02 IST)

தடையை மீறி கோயம்பேடு வந்த ஆம்னி பேருந்துகள்.. அரசின் நடவடிக்கை என்ன?

private buses
சென்னை நகருக்குள் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் வரக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தடையை மீறி வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இன்று சென்னை நகருக்குள் வந்திருக்கின்றன 
 
சென்னையில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் சீராக இயக்கப்பட்டு வருவதாகவும் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மாநகர பகுதிக்குள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தென் மாவட்டங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு வந்து  இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தைப்பூசம் குடியரசு தின விடுமுறை தினங்கள் வருவதால்  வழக்கம் போல் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகள்  ஊர்மையாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 
 
இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? தைப்பூசம் குடியரசு தினம் வரை ஆம்னி பேருந்துகளை நகருக்கு அனுமதிக்குமா? அல்லது விதிக்கப்பட்ட தடை தொடருமா? கோயம்பேடு வந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva