1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (12:47 IST)

அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

exam
கோடை விடுமுறை முடிந்த உடன் eந்தந்த வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கியுள்ளார் 
 
இதன்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் காலாண்டு அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு கால அட்டவணை விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படிமார்ச் 13, 2023-ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் என்றும், தொடர்ந்து மார்ச் 14, 2023-ல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், ஏப்ரல் 3, 2023-ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.