திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (18:54 IST)

10ம் வகுப்பு கணிதத் தேர்வை எத்தனை மாணவர்கள் எழுதவில்லை தெரியுமா?

exam
இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு கணிதத் தேர்வை 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடந்த 10ம் வகுப்பு கணிதத் தேர்வு 45,618 மாணவர்கள் எழுதவில்லை என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
45,618 வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்ற நிலையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஏன் எழுதவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது