தேர்வறையில் 5 கிலோ பிட்.. 11 கண்காணிப்பாளர்கள் நீக்கம்! – நாமக்கலில் பரபரப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் பல பள்ளிகளில்பிட் அடிப்பதை கண்டுகொள்ளாமல் இருந்த கண்காணிப்பாளர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கடந்த 5ம் தேதி முதலாக பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொல்லிமலை, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் காப்பி அடித்து எழுத பிட் பேப்பர்கள் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5 கிலோ பிட் பேப்பர்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள தேர்வுத்துறை 11 அறை கண்காணிப்பாளர்களையும் தேர்வு பணியில் இருந்து கூண்டோடு நீக்கியுள்ளது.