செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (06:08 IST)

அரியர் இருந்தால் மீண்டும் ஃபர்ஸ்ட் இயர்: அண்ணா பல்கலையின் புதிய விதியால் மாணவர்கள் அதிர்ச்சி

அண்ணா பல்கலைக்கழக எஞ்சினியர் மாணவர்கள் அரியர்கள் எழுதுவது குறித்து வகுத்த விதிமுறையை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் போராட்டம் செய்ததால் தற்போது புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது
 
இதன்படி ஒரு மாணவர் முதலாம் ஆண்டில் அரியர் வைத்திருந்தால் அவர் அடுத்த மூன்று செமஸ்டருக்குள் அதாவது 4வது செமஸ்டருக்குள் அந்த அரியரை முடித்துவிட வேண்டும். இல்லையேல் அவர் 5ஆம் செமஸ்டருக்குரிய தேர்வை எழுத முடியாது. மேலும் முதல் செமஸ்டருக்குரிய மாணவர்களின் வகுப்புக்கு சென்று அவர் அந்த அரியரை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரே ஐந்தாவது செமஸ்டருக்கான வகுப்பில் அனுமதிக்கப்படுவார்.
 
இதேபோல்  6-வது செமஸ்டருக்குள் நுழைய ஒரு  மாணவர் தமது இரண்டாவது செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்திருக்கக் கூடாது. இதே நடைமுறையின் படியே, 7 மற்றும் 8 என அடுத்தடுத்த பருவத் தேர்வுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தும். இந்த புதிய விதிமுறையை அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், தோல்வியுறும் மாணவர்கள் மீண்டும் அந்த வகுப்புக்குச் சென்று பயின்று தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் படித்து வரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அந்தந்த செமஸ்டருக்குரிய தேர்வை அந்தந்த செமஸ்டருக்குள் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது