தலைமறைவாகி 50வது நாள் ; எஸ்.வி.சேகருக்கு பாராட்டு விழா : வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Last Modified செவ்வாய், 12 ஜூன் 2018 (11:25 IST)
50 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறை கைது செய்யாமல் இருப்பதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

 
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டும் அவருக்கு முன் ஜாமீன் வழங்காத நிலையிலும், அவர் 50 நாளுக்கு மேல் தலைமறைவாகவே இருக்கிறார். 

 
ஆனால், போலீசாருடன் அவர் பாதுகாப்பாக காரில் செல்லும் புகைப்படங்களும், அவரின் குடும்ப விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
இந்நிலையில், இந்த விவகாரத்தை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர்.webdunia

இதில் மேலும் படிக்கவும் :