நீதிபதியின் மனைவியிடம் 9 பவுன் செயின் பறிப்பு - கோவையில் அதிர்ச்சி

chain
Last Modified செவ்வாய், 12 ஜூன் 2018 (11:20 IST)
கோவையில் நீதிபதியின் மனைவியிடம், கொள்ளையர்கள் 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் நகை கொள்ளையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் செல்வபாண்டியன், தனது மனைவி மகேஸ்வரியோடு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது இருசக்கரவாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்த கொள்ளையர்கள், மகேஸ்வரியின் கழுத்தில் இருந்து 9 பவுன்நகையைப் பறித்துச் சென்று தப்பித்தனர்.
 
இதனையடுத்து செல்வபாண்டியன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நீதிபதியின் மனைவியிடமே நகைப் பறிப்பு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :