திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2023 (16:19 IST)

திமுக ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கூட தரமுடியாது.. நெகட்டிவ் மதிப்பெண் தான்: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கூட கொடுக்க முடியாது என்றும்  நெகட்டிவ் மதிப்பெண் தான் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக திமுக ஆட்சி மீதும் திமுக அமைச்சர்கள் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கூட கொடுக்க முடியாது என்றும் நெகட்டிவ் மதிப்பெண் கொடுக்கும் அளவிற்கு தான் ஆட்சி இருக்கிறது என்று கூறினார்.
 
திமுக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி உள்ளது என்றும் இவர்களது நோக்கம் எல்லாம் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்பது மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார் 
 
Edited by Siva