திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஜூலை 2023 (19:29 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

thayalu ammal
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள்  இன்று சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு  ஒவ்வாமையால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தயாளு அம்மாள் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு  விரைந்து சென்று, தனது தயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம்  கேட்டறிந்ததாக தகவல் வெளியாகிறது.