திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (20:26 IST)

பட்டிமன்றம் ராஜா உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

tamilnadu muthamil isai vila
சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு இசைவிழாவில் பட்டிமன்ற ராஜா உள்ளிட்ட கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ஆம் ஆண்டு இசைவிழாவில் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில்,  "இயல் செல்வம்" விருதினை பட்டிமன்றம் புகழ்  எஸ்.ராஜா , "இசை செல்வம்" விருதினை எஸ்.மகதி , "ராஜரத்னா" விருதினை இஞ்சிக்குடி . ஈ.பி.கணேசன் , "நாட்டிய செல்வம்"  விருதினை வழுவூர் எஸ்.பழனியப்பன் , "வீணை செல்வம்" விருதினை திரு. ராஜேஷ் வைத்யா , "தவில் செல்வம்" விருதினை இடும்பாவனம்  கே.எஸ்.கண்ணன்  ஆகியோருக்கு  வழங்கினார்.

இந்த விருதைப் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா,  நான் வாங்கும் முதல் விருது இது என்று கூறினார்.

மேலும், ‘’90 களில் நான் முதன் முதலில்  பேசியது ஜூலை மாதத்தில்தான் அதே போன்ற ஜுலை மாதத்தில் முதல்வர் கையில் இந்த விருது வாங்கினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.