Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திமுக-வுடன் கூட்டு வைத்துள்ள எடப்பாடி அரசு - ஓ.பி.எஸ் கடும் தாக்கு


Murugan| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (13:21 IST)
தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு திமுகவுடன் கூட்டு வைத்துள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றதுல் அதில் ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
 
எடப்பாடி அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்தால், துரைமுருகனுக்கு கோபம் வருகிறது. திமுகவுடன் எடப்பாடி அரசு  கூட்டு வைத்துள்ளது. அதனால்தான், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் துரைமுருகன் வெளிநடப்பு செய்கிறார்.
 
தேர்தல் கமிஷன் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அவரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்களோ தலைமை கழகத்திற்குள் நுழைவதற்கு தகுதி கிடையாது. அவைத்தலைவர் மதுசூதனனும், பொருளாளரான நானும்தான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, எங்களுக்குதான் அந்த தகுதியுண்டு” என அவர் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :