Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள் - திவாகரனுக்கு பிபி ஏற்றிய முதல்வர்


Murugan| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (14:05 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சமீபத்தில் அறிவித்த அதிமுக நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக, திவாகரனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் இடையே மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது.

 

 
இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்பேன் என தினகரன் கூறிய கெடு கடந்த 4ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.  அதை ஏற்பதாக சிலரும், ஏற்காமாட்டோம்.. நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழே செயல்பட விரும்புகிறோம் எனக் கூறி வருகின்றனர்.
 
தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் இருந்தவரை, திவாகரனின் கருத்துகளை முதல்வர் பரிசீலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாக தெரிவித்தனர். இதனால், ஆட்சி முடிவுகள் பற்றி டெல்லியிடம் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், தினகரனின் நிர்வாகிகள் பட்டியலுக்கு, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

 
இது திவாகரன் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இது தொடர்பாக எடப்பாடி தரப்பிடம் பேசிய திவாகரன், கடுமையான கோபத்திற்கு சென்றதால் அவருக்கு பி.பி எகிறிவிட்டதாம். அதையடுத்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :