Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இது திட்டமிட்ட என்கவுண்டர்: முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி பேட்டி

Last Modified வெள்ளி, 2 மார்ச் 2018 (10:17 IST)
நேற்று மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்த என்கவுண்டர் ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம் என முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

முத்து இருளாண்டியின் மற்றும் சகுனி கார்த்திக் இருவரையும் போலீசார் ஆஜராக கூறியதாகவும், அதன்பேரில் இருவரையும் அழைத்த வந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு போலீசார் கொன்றுவிட்டதாகவும் சகோதரி சித்திரைச்செல்வி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடந்தபின் இருவரது குடும்பத்தினருக்கு போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை கூட பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி கூறியுள்ளார். இந்த பேட்டி தமிழகத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :