1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (17:15 IST)

மதுரை என்கவுண்ட்டரில் ரவுடிகள் சுட்டுக் கொலை

மதுரை காவல்துறையினர் நடத்திய என்கவுண்ட்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 
மதுரை சிக்கந்தர்சாவடியில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் என்பவர்களை, மதுரை மாநகர் தனிப்படை காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது ரவுடிகள் ஓடியதால் சுட்டு கொல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.

மதுரையில் அதிக அளவில் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட ரவுடிகளை கைது செய்ய சென்றபோது, தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது காவல் துறையினர் தங்களை தற்காத்து கொள்ள சுப்பாக்கி சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிந்துள்ளனர். முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.