வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (11:12 IST)

முரசொலி இணையதளம் முடக்கம்

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முரசொலி  பத்திரிக்கை திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. திமுகவின் முரசொலி பத்திரிக்கை கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முரசொலி நாளிதழின் பவள விழாவில்  கருணாநிதியின் புத்தகங்கள், புகைப்படங்களின் தொகுப்பு, மெழுகு சிலை என கண்காட்சிக்கு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில் முரசொலி நாளிதழின் இணையதளம் இன்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. முரசொலி இணையதளத்துக்குள் சென்றால், ஹேக்கர் பக்கத்துடன் புத்தாண்டு வாழ்த்து கூறப்பட்டடுளள்ளது. மேலும் இந்த இணையதளத்தில் இன்னும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றும் ஹேக்கர்கள் அறிவுறுத்தினர்.
 
இதையடுத்து முரசொலி இணையதளத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பிரிவினர் இணையதளத்தை சரி செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முரசொலி இணையதளம் முடக்கப்பதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.