Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிகாந்த் அதிமுகவை விமர்சிக்கவில்லை; அமைச்சர் ஜெயகுமார்

jayakumar
Last Modified ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (12:07 IST)
ரஜினிகாந்த் அதிமுகவை விமர்சிக்கவில்லை, திமுகவை விமர்சித்திருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன். அப்படி முடியவில்லை என்றால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்து விடுவேன் என்று சூப்பர்ஸ்டார் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார். மேலும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயகுமார், ரஜினியின் அரசியல் முடிவால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஓராண்டாக எதுவும் சரியில்லை என ரஜினி கூறியது அதிமுகவை இல்லை திமுகவாக கூட இருக்கலாமே என்றார். அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தி ரஜினி விமர்சிக்கவில்லை. எனவே ரஜினி கூறியதை ஊடகங்கள் திசைதிருப்ப வேண்டாம் என்று ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :