Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாடகை வீட்டுக்கு செல்லும் தினகரன்: ஆர்கே நகருக்கு விரைவில் குடிபெயர்கிறார்!

Last Modified சனி, 30 டிசம்பர் 2017 (17:55 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆர்கே நகருக்கு குடிபெயர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
சுயேட்சையாக போட்டியிட்டு பலம்வாய்ந்த அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி அசுர வெற்றிபெற்ற டிடிவி தினகரன் நேற்று சபாநாயகர் தனபால் முன்னிலையில் ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் விரைவில் தனது தொகுதி மக்களை சந்தித்து நன்றி சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் தினகரன் பல திட்டங்களை வைத்து அரசியலில் சில காய் நகர்த்தல்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது தொகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
வீடு வாடகைக்கு பார்க்கும் பணியை தனது ஆதரவாளரான வெற்றிவேலிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் உள்ள ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு பேசி முடித்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. டிடிவி தினகரன் விரைவில் அடையாறில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆர்கே நகர் வாடகை வீட்டுக்கு குடிபெயர உள்ளதாக கூறப்பட்டாலும், இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ எந்த அறிவிப்பும் வரவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :