புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (22:45 IST)

புரோ கபடி போட்டி 2019: மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டிகள் கடந்த 4 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் பாட்னா அணிகளும், குஜராத் மற்றும் ஜெய்ப்பூர்அணிகளும் மோதின
 
முதலில் நடைபெற்ற மும்பை மற்றும் பாட்னா அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் பாதியில் மும்பை அணி அபாரமாக விளையாடி அதிக புள்ளிகள் எடுத்தது. ஆனால் இரண்டாவது பாதியில் பாட்னா அணி சுதாரித்து. இருப்பினும் மும்பை அணி 34 புள்ளிகளும் பாட்னா அணி 30 புள்ளிகளும் எடுத்ததால் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து நடைபெற்ற குஜராத் மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெய்ப்பூர் அணி 22 புள்ளிகளும் குஜராத் அணி 19 புள்ளிகளும் பெற்றதால் ஜெய்ப்பூர் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியின் முடிவில் ஜெய்ப்பூர் அணியை 30 புள்ளிகளுடன் முதல் இடத்தை முதலிடத்தை பெற்றுள்ளது. டெல்லி அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பெங்கால் அணி 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மும்பை, பெங்களூரு, ஹரியானா, தமிழ் தலைவாஸ் அணிகள் அடுத்த நான்கு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது