2 அவிச்ச முட்டை 1,700 ரூபாயாம்... அதிர்ந்து போன கஸ்டமர்!

Last Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (12:12 IST)
ஸ்டார் ஹோட்டலில் 2 அவித்த முட்டைக்கு ரூ.1,700 என பில் போட்டதால் கஸ்டமர் கடுப்பாகி அதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
மும்பையில் உள்ள ஓர்லியில் உள்ள போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலுக்கு கார்த்திக் தார் என்பவர் அண்மையில் சென்றுள்ளார். அப்போது அங்கு உணவருந்திவிட்டு பில்லை பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
ஆம், அதில் இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700 என இருந்தது. இதை பார்த்து கடுப்பான கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். மேலும், முட்டை போட்ட கோழி பணக்கார குடும்பத்து கோழியாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஹோட்டல் நிர்வாகம் இது குறித்து எந்த கருத்தும் வெளியிடாத நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என பொருத்திருந்து பார்ப்போம். 


இதில் மேலும் படிக்கவும் :