செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (10:24 IST)

போட்டியின்றி தேர்வாகும் மாநகராட்சி மேயர்கள்! – பெண்களுக்கு அதிக வாய்ப்பு!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து இன்று மாநாகராட்சி மேயர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பல பேரூராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் இளம் பெண் மேயராக பிரியா பதவி ஏற்றுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார், மதுரை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் இந்திராணி பொன்.வசந்த்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.