வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (10:10 IST)

மாணவர்களை வெளியே நிற்க வைத்தால்…! – பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை என மெட்ரிக் பள்ளிகள் இயக்குந்ரகம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பொதுத்தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியே நிற்க வைப்பதாகவும், தண்டனைகள் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்களை இதுகுறித்து எச்சரித்துள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.