திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (11:14 IST)

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? கமலை கலாய்க்கும் ஜெயக்குமார்

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது என கமலை தாக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், காவிரி நீர் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாராமியை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார். 
 
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இனி காவிரியில் நீர் திறக்கும் அனைத்து உரிமைகளும் ஆணையத்திடமே உள்ளது.

எனவே கமல் குமாரசாமியை சந்தித்ததில் எந்த பயனும் இல்லை, மேலும் குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என கமலை கலாய்க்கும் விதத்தில் பேசியுள்ளார் ஜெயக்குமார்.