1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (13:58 IST)

கர்நாடக முதலமைச்சரிடம் பேசியது என்ன? கமல் பேட்டி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சற்றுமுன் கர்நாடக முதல்வர் குமாராமி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இருவரும் காவிரி பிரச்சனை குறித்து சில நிமிடங்கள் பேசிய பின்னர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
 
இந்த சந்திப்பின்போது கமல்ஹாசன் கூறியதாவது: இந்த நேரத்தில் திரைப்படங்களை விட காவிரி நீர் பிரச்சனை மிக முக்கியமானது. எனவே காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது. 'காலா' விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது; பேசவும் இல்லை' என்று கூறினார்.
 
இந்த சந்திப்பு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் கூறியபோது, 'கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் விவசாயிகள் சகோதர சகோதரிகளாகவே சரியாக சமமாக நீரை பங்கிட்டு கொள்ளவேண்டும் என்று நானும் தகமல்ஹாசன் அவர்களும் கலந்தாலோசித்தோம்' என்று கூறினார். 
 
காவிரி பிரச்சனை சுப்ரீம் கோர்ட் மூலம் முடிவடைந்து காவிரி மேலாண்மை ஆணையமும் அறிவிக்கப்பட்டு அந்த ஆணையத்தின் உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுவிட்டனர். எனவே காவிரி பிரச்சனை முடிந்த பின்னர் கமல்ஹாசனும், குமாரசாமியும் அப்படி என்ன தான் பேசினார்கள்? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.