திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (12:35 IST)

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

anbil
வரும் மார்ச் மாதம் முதல் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
2022-23 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில்  12-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது.
 
அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20 வரையிலும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் 5 வரையிலும்  நடைபெறும் உள்ளது. 
 
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva