வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (16:31 IST)

ஜன.,18 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கவில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிககளுக்கு  விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


ஒய்.எம்.சி திடலில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காசி நடந்து வருகிறது. இதில், சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று சர்வதேச புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

 அப்போது அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டுள்ளானர்,. இதில், பங்கேற்க முடியாத அயல் நாட்டு பதிப்பாளர்கள் வீடியோ காட்சி மூலம் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும், வரும் ஜன்வரி 18 ஆம் தேதி பள்ளிககளுக்கு  விடுமுறை அறிவிக்கவில்லை; பொங்கலுக்குப் பின் புதன் கிழமை விடுமுறை அளிப்பது பற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.