சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (21:33 IST)

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு

பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ் நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு ரூ.225, செய்முறை அல்லாத பாடங்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதினொன்றாம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.50 மற்றும் இதர கட்டணமும் செலுத்த வேண்டும் எனவும், மெட்ரிக்குலேசன், சு ய நிதி, ஆகிய அனைத்துப் பள்ளிகளிலும், தமிழ்வழி அல்லாத மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக் கட்டணத்தை 06-01-2023 ஆம் தேதி முதல் வரும்20-01-2023 ஆம் தேதிக்குள் மாணவர்களிடம் இருந்து பெற்று http:/www.dgel.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.